மிளகாய் பொடி தூவி பிரபல ரவுடி வெட்டிக்கொலை : பகீர் சம்பவம்

murder
Last Modified வியாழன், 3 ஜனவரி 2019 (13:10 IST)
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பிரபல முன்னாள் ரவுடி, ஒரு கும்பலால்  வெட்டி  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள சத்தியா நகரில் வசித்து வந்தவர் சந்தானம் (36).இவருக்கு இரு மனைவிகள் மற்றும் ஒரு மகன் உள்ளதாக தெரிகிறது.  இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல ரவுடியிடம் இவர் தொடர்பு வைத்திருந்ததார். அதனால் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன.
 
பின்னர் ரவுடி தொழிலை விட்டுவிட்டு சந்தானம் மன்ம் திருந்தி வாழ்ந்து வந்தார் . குடும்பத்தை காப்பாற்றுவதற்கு பெயிண்டிங் வேலைக்குச் சென்று வந்தார். 
 
நேற்று இரவு வேலை முடிந்து தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது  அப்பகுதியில் வசித்து வரும் ராபர்ட், ஜோசப், மற்றும் அவர்களது கூட்டாளிகள் வழிமறித்து சந்தானம் முகத்தில் மிளகாய் பொடி தூவி , தம் கையில் வைத்திருந்த அரிவாளால் சம்பத்தை சரமாரியாக  வெட்டிவிட்டு தலைமறைவாகினர்.
 
இக்கொலையைப் பார்த்த மக்கள் சந்தானத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பறிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :