திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 6 ஜூன் 2025 (08:44 IST)

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

Chenab Railway Bridge

ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் செல்கிறார். 1400 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் சிறப்புகள் குறித்து காண்போம்.

 

செனாப் ரயில்வே பாலத்தின் சிறப்புகள்:

 
  • காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்வே பாலம் முழுவதும் இரும்பால் அமைக்கப்பட்ட ஒரு வளைவு பாலமாகும்.
  • இந்த பாலம் 1,315 மீட்டர் (சுமார் 1.3 கி.மீ) நீளம் கொண்டது. 
  • இந்த ரயில்வே பாலம் கத்ராவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் ரயில்வே பாதையை இணைக்கும் பாலமாக உள்ளது
  • பூகம்ப அபாய பகுதியான மண்டலம் 5ல் இந்த பாலம் அமைக்கப்படும் நிலையில், ஐஐடி டெல்லி, ஐஐடி ரூர்கி, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தென்கொரியா, பின்லாந்து நாடுகளின் தொழில்நுட்பம் என பல்வேறு பங்களிப்புடன் மிகவும் உறுதியான பாதுகாப்பான பாலமாக இது கட்டப்பட்டுள்ளது.
  • இந்த பாலத்தை கட்ட 28,660 மெட்ரிக் டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் கட்டுமான உறுதிக் கொண்டதாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
  • 8 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பங்களை கூட தாங்கும் அளவிற்கு வலிமையும், 40 டன் டிஎண்டி வெடிப்புகளை தாங்கும் வலிமையும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்திய பொறியியல் துறையின் புதிய சாதனையாக உருவாகியுள்ள செனாப் பாலத்தின் மீது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.
 

Edit by Prasanth.K