மோடி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்...

modi
Last Modified வெள்ளி, 4 ஜனவரி 2019 (20:27 IST)
சினிமாவில் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது தற்போதைய டிரெண்ட் ஆகி வருகிறது. சமீபத்தில் ’தி ஆக்சிடெண்டல் பிரைம்மினிஸ்டர் ’என்று பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தை வெளியிடக்கூடாது என காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சி பாலிவுட்டில் நடந்து வருகிறது,
 
மோடியாக, விவேக் ஓபராய் நடிக்க உள்ளார். இவர் நடிகர் அஜித் நடித்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
 
பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளவர் விவேக் ஓபராய் ஆவார். இவர் மோடி பயோ பிக்சரில் நடிக்க நிறைய விவரங்கள் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகின்றன.
 
’பி.எம்.நரேந்திரமோடி’ என பெயர் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை,மேரி கேம் படத்தை இயக்கிய இயக்குநர் இயக்குகிறார்.
 
வரும் 7 ஆம் தேதி மோடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மகாராஸ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வெளியிடுவதாக தகவ வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :