1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. lalu prasad yadav case judgement

மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: லாலு பிரசாத் யாதவை தொடரும் பரிதாபம்!

லாலு பிரசாத் யாதவ்
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மாட்டு தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது
 
 ராஞ்சியில் உள்ள கருவூலத்தில் முறைகேடாக ரூபாய் 130 கோடி மோசடி செய்ததாக கடந்த 2005ஆம் ஆண்டு லாலு பிரசாத் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது 
 
இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
14 பெண்களை திருமணம் செய்த 54 வயது நபர்!