1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:02 IST)

பாஜக மீதான விரக்தி உ.பி தேர்தல் முடிவில் தெரியும் - லாலு பிரசாத் கணிப்பு!

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் பத்தாம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அம்மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.28 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் பாஜக அரசின் மீதான மக்களின் விரக்தி உ.பி தேர்தல் முடிவில் தெரியும் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்த லாலு, பணவீக்கம், வறுமை பற்றி பேசாமல் அயோத்தி, வாரணாசி குறித்து பேசி பாஜக மக்களை திசை திருப்புவதாக குற்றம்சாட்டினார்.