செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (14:02 IST)

பாஜகவில் இணைந்தார் குஷ்பு!!

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைந்தார்.
 
நடிகை குஷ்பு இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய நிலையில் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடனிருந்தார். 
 
பாஜகவில் இணைந்த பின்னர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன். நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி என பேசினார் குஷ்பு.