செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (10:26 IST)

பாஜகவில் குஷ்பு இணைவது மகிழ்ச்சி: அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவில் குஷ்பு இணைவது மகிழ்ச்சி: அமைச்சர் ஜெயக்குமார்
நடிகை குஷ்பு சற்று முன்னர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதோடு, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி விட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று மதியம் நடிகை குஷ்பு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள உள்ளார் என்பதும் அதன் பின்னர் அவர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர்களை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பாஜகவில் நடிகை குஷ்பு சேர இருப்பதை ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கருத்து கூறிய போது ’பாஜகவில் நடிகை குஷ்பு இணைவது எனக்கு மகிழ்ச்சி என்று கூறினார். அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பு இணைவதில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளது நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்து உள்ளதை அதிமுகவும் வரவேற்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது