1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (10:11 IST)

சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய குஷ்பு!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
 
நடிகை குஷ்பு பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்ததால் சில நிமிடங்களுக்கு முன் அவர் வகித்து வந்த தேசிய செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த பதவி பறிக்கப்பட்ட ஒருசில நிமிடங்களில் குஷ்பு விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாஜகவில் இணைய உள்ள நிலையில் காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியுள்ளார் என்பதும், இன்னும் சில மணி நேரத்தில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை குஷ்பு சந்தித்து அக்கட்சியில் இணையவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.