கும்பமேளா நடந்து வரும் பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சியளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி நடந்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பிரயாக்ராஜிற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு உணவு சமைக்க, தங்குவதற்கு என ஏராளமான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒரு குடிலில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த குடில்களுக்கும் பரவியுள்ளதால் தீ அதிகமாகி புகை மூட்டம் எழுந்துள்ளது. அப்பகுதியில் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் இதுவரை பக்தர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K