1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kerala Orange alert for 11 districts

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!

கேரளா
கேரளாவில் இன்றும் நாளையும் 11 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இன்றும் நாளையும் 11 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
ஆம் கொல்லம், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு வரும் 24 ஆம் தேதி வரை கேரளாவில் பரவலாக கனமழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.