1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kerala may be face powercut issue

பஞ்சாபை அடுத்து கேரளாவிலும் மின்வெட்டு? மின் துறை அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு

நிலக்கரி
பஞ்சாப் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு என அம்மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் கேரள மின்துறை அமைச்சர் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து கூறிய போது மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரத்தின் அளவு குறைந்து கொண்டே வந்தால் கேரளாவில் மின்வெட்டை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். இதனால் கேரள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கேரளாவில் தற்போது வரை மின்வெட்டு இல்லை என்றாலும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதால் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் மின் பயன்பாட்டை பொதுமக்களும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருவதாகவும் மின்துறை அமைச்சர் கூறியுள்ளார்
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஊரக உள்ளாட்சி தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை என்பதால் பலத்த பாதுகாப்பு!