இன்றைக்குள் பதவி விலக வேண்டும்: பல்கலை துணைவேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவு
இன்றைக்குள் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டும் என கேரள மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநில ஆளுநர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்
இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கேரள உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று மாலை திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva