1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (22:25 IST)

கெர்சன் நகரிலிருந்து மக்களை வெளியேற்றும் ரஷியா !

ukraine theater
உக்ரைன் நாட்டில் கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றிய நிலையில், பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன்  நாட்டின் மீது உலகப் பெரும் வல்லரசான ரஷியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. ஏழரை மாதத்திற்கு மேலாக இப்போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில், உக்ரைனில் சில பகுதிகளை தங்கள் பிராந்தியத்துடன் ரஷ்யா இணைத்துக்கொண்டது.

இதற்கு  ஐ நா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கான தீர்மானம்   ஒன்று ஐ நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

இந்த நிலையில், தங்கள் நாட்டின் 4 பகுதிகளை மீட்க உக்ரைன் போராடி வரும் நிலையில், தற்போது அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.

மேலும், ஆக்ரமிப்பு பகுதியான கெர்சனில் பொதுமக்களை வெளியேறும்படி அதிகாரிகள் கூறி வருவதால் இந்த நகர் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj