1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Central Govt appointed as president for madurai aiims

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்: மத்திய அரசு உத்தரவு

AIIMS
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நாகராஜன் வெங்கட்ராமன் என்பவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவராக மத்திய சுகாதாரத்துறை நியமனம் செய்துள்ளது.
 
 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் பதவிக்கு நாகராஜ் வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் இந்த மருத்துவமனையின் கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பள்ளங்களில் மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன- அன்புமணி ராமதாஸ்