ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 3 ஜூலை 2025 (12:27 IST)

அந்த கம்யூனிஸ கிறுக்கனிடமிருந்து நியூயார்க்கை காப்பாற்றுவேன்! - இந்திய வம்சாவளி மேயருக்கு எதிராக ட்ரம்ப் சூளுரை!

Zohran mamdani vs Trump

நியூயார்க் மாகாண மேயராக தேர்வாகியுள்ள சோஹ்ரான் மம்தானியிடமிருந்து நியூயார்க்கை காப்பாற்றுவேன் என ட்ரம்ப் பேசியுள்ளார்.

 

சமீபத்தில் நியூயார்க்கில் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் முன்னாள் மேயர் ஆண்ட்ரூ கியூமோ, இந்திய வம்சாவளி இஸ்லாமியரான சோஹ்ரான் மம்தானியும் போட்டியிட்டனர். கியூமோதான் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பேசி வந்த சோஹ்ரான் மம்தானி மேயராக வெற்றிப் பெற்றார். இது ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

 

இதுகுறித்து சமீபத்தில் ட்ரூத் தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப் “மம்தானி நியூயார்க் நகரத்தை அழிக்க அனுமதிக்க மாட்டேன். எல்லாம் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. நியூயார்க் நகரத்தை காப்பாற்றி மீண்டும் அதை சிறந்த நகரம் ஆக்குவேன்” என சூளுரைத்தார்.

 

யார் இந்த சோஹ்ரான் மம்தானி?

 

நியூயார்க் நகர மேயரான சோஹ்ரான் மம்தானி பிரபல இந்திய பெண் திரைப்பட இயக்குனர் மீரா நாயரின் மகன் ஆவார். இவரது தந்தை மஹ்மூத் மம்தானி உகாண்டாவில் கல்வியாளராக இருந்தவர். ஏழு வயதாக இருந்தபோது நியூயார்கில் குடியேறிய மம்தானி தனது கல்லுரி படிப்புகளை முடித்து அரசியலில் ஈடுபட்டார். 

 

Edit by Prasanth.K