1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (19:48 IST)

’’உயிர் பிழைப்போம்...’’.விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்!

இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, நடிகர், விஜய், நடிகர் விஜய் சேதுபதி,நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் விரைவில் திரையில் வெளியாக இருந்த நிலையில், கொரோவாலா ஊரடங்கு உத்தரவு உள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

இந்நிலையில், படம் எப்போது வெளியாகும் என விஜய்  ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கேட்டதற்கு, ’முதலில் உயிர் பிழைப்போம்…அப்புறம்  கொண்டாடலாம்’ என கூறி ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார்.