1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (08:57 IST)

கேதர்நாத்தில் 101 கோடி சம்பாதித்த கழுதைகள்! சோகத்தில் ஹெலிகாப்டர்கள்!

Kedarnath Donkeys
சமீபத்தில் கேதர்நாத் புனித யாத்திரை நடந்த நிலையில் பயணிகளை அழைத்து சென்ற கழுதைகள் ரூ.101 கோடி சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் கேதர்நாத் புனித யாத்திரைக்கு நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு கடந்த மாதத்தில் கேதார்நாத் புனித யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

கேதார்நாத் புனித யாத்திரைக்கும் சுமார் 20 கி.மீ தூரம் மலைகளை சுற்றி பயணிக்க வேண்டும். இந்த பயணத்திற்கு பயணிகள் கழுதை சவாரி அல்லது ஹெலிகாப்டர் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்கின்றனர்.


நடந்து முடிந்த கேதார்நாத் யாத்திரையில் கழுதை சவாரி மூலம் மட்டும் சுமார் ரூ.101 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்களாம் கழுதை உரிமையாளர்கள். ஆனால் பக்தர்களை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் நிறுவனங்கள் ரூ.86 கோடி அளவில்தான் சம்பாதித்துள்ளனவாம். மலைப்பயணத்திற்கு கழுதை சவாரி விலை குறைவாக உள்ளதால் பெரும்பாலான பயணிகள் கழுதை சவாரியை விரும்புவதாக கூறப்படுகிறது.

Edited By Prasanth.K