உலகின் மிகப்பெரிய சிவன் சிலை! – ராஜஸ்தானில் இன்று திறப்பு!
உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் அமைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று திறந்து வைக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் சிவனுக்கு பல கோவில்கள் உள்ள நிலையில் ரிஷிகேஷ் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரம்மாண்டமான சிவன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத்தலமான உதய்ப்பூரில் இருந்து சற்று தூரத்தில் பிரம்மாண்டமான சிவன் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்டு வரும் இந்த சிலையின் உயரம் 369 அடி என கூறப்பட்டுள்ளது. இந்த சிலையை தத் பதம் சன்ஸ்தான் என்ற அமைப்பு அமைத்துள்ளது. தியான நிலையில் சிவன் உள்ளது போல அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்குள் பயணிகள் உள்ளே சென்று பார்க்கும் அளவில் லிப்டுகளும் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த சிலையை இன்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் திறந்து வைக்கிறார். உதய்பூர் அருகே அமையும் இந்த சிலை சிறந்த சுற்றுலா தளமாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited By Prasanth.K