செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 29 அக்டோபர் 2022 (08:43 IST)

டெல்லியில் தீப்பிடித்த விமானம்; பயணிகள் அலறல்! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Indigo Flight Fire
டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டபோது திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விமான நிலையத்திலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று பெங்களூருக்கு புறப்பட்டது. நேற்று இரவு 9.30 மணியளவில் விமானிகள், சிப்பந்திகள் மற்றும் பயணிகள் உட்பட 184 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அந்த விமானம் ஓடுபாதையில் டேக் ஆஃப் ஆவதற்கு முழு வேகத்தில் சென்றது.

விமானம் பறக்க சில வினாடிகளே இருந்த சமயம் திடீரென எஞ்சின் பகுதியில் தீப்பற்றியது. இதை கண்டு பயணிகள் அலற தொடங்கவே உஷாரான விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். உடனடியாக அங்கு மீட்பு மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.


தீ அணைக்கப்பட்டதுடன் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானியின் உடனடி நடவடிக்கையால் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து இதுபோன்ற கோளாறுகளை சந்தித்து வரும் நிலையில், விமான எஞ்சினில் தீப்பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K