வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (15:16 IST)

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவு.! தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

Senthil Balaji
அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.  
 
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில்  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. அமலக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள 3 வழக்குகளையும் விசாரிப்பீர்களா என்று அமலாக்கத்துறைக்கு   நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
அப்போது அனைத்தும் விசாரிக்கப்படுவதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை தனியாக விசாரிக்கப்போவதில்லை என எடுத்துக்கொள்ளலாமா என்று  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை அளித்த பதில்களை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.


அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து,  செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.