திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 3 ஜூன் 2018 (14:47 IST)

கருணாநிதி சிறந்த பேச்சாளர் - மோடி புகழாரம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளுக்கு மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த கலைஞர், உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் கலைஞரின் 95 வது பிறந்தநாளான இன்று திமுக வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் - நடிகைகள், பொதுமக்கள் என பலர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டர் பக்கத்தில் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான  கருணாநிதி ஜீக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாள் வாழ கடவுளிடம் பிராத்திப்பதாக மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.