1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 31 மே 2018 (12:13 IST)

சீனாவை எதிர்கொள்ள இந்தோனேஷியாவுடன் உறவு: மோடியின் சுற்றுப்பயண வியூகம்!

கடந்த சில காலமாக சீனா இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி உள்ளது. எல்லை பிரச்சினை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் மீது தடை விதிக்க விடாமல் ஐநாவில் முட்டுக்கட்டை போடுவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடக்கம். 
 
இந்நிலையில், இந்தோனேஷியாவுடனான இந்தியாவின் உறவு இந்தியாவுக்கு பல வகைகளில் சீனாவிடமிருந்து பாதுகாப்பை தர வல்லது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 
 
இந்தோனேஷியாவுடனான வரலாற்று ரீதியிலான, கலாச்சாரம் மற்றும் வியூக அடிப்படையிலான உறவை பலப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி முதல் முறையாக இந்தோனேஷியா சென்றுள்ளார். 
 
மோடி அரசு கடல் வழி உறவுகளை பலப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை தர ஆரம்பித்துள்ளது. ராஜதந்திர வியூக அடிப்படையில் பார்த்தால் அமெரிக்கா, சீனாவை போன்றே, இந்தியாவுக்கு இந்தோனேஷியாவும் முக்கியமான நாடு. 
 
சீனாவின் அத்துமீறல்களை இந்தோனேஷியா கண்டிக்க துவங்கியுள்ளது. அதோடு இந்தோனேஷியாவில் அதிகப்படியான இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். இது காஷ்மீர் பிரச்சினை மற்றும் ஜிகாதி தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பலம் கொடுக்கும் என தெரிகிறது.