1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Karnataka withdraw lockdown rules

கர்நாடகாவில் ஊரடங்கு வாபஸ்; பள்ளிகளை திறக்க முடிவு!

National
கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்த நிலையில் முழு ஊரடங்கை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநில அரசுகள் வார இறுதிகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கர்நாடகாவில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் முதலாக கர்நாடகாவில் வார இறுதி முழு ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், பெங்களூர் தவிர்த்து மற்ற பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
செலவை இழுக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்... ரூ.1250 கோடி ஆக அதிகரிப்பு!