திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (15:10 IST)

முதல்வர் முன்னிலையில் அமைச்சருடன் எம்பி மோதல்: பெரும் பரபரப்பு!

முதல்வர் முன்னிலையில் அமைச்சருடன் எம்பி மோதல்: பெரும் பரபரப்பு!
முதலமைச்சர் முன்னிலையில் மக்களவை எம்பியும் மாநில அமைச்சரும் மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் ராம்நகர் என்ற பகுதியில் நலத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்களவை காங்கிரஸ் மக்களவை எம்பி டிகே சுரேஷ் மற்றும் கர்நாடக மாநில அமைச்சர் அஸ்வத் நாராயணன் ஆகியோரும் உள்பட கலந்து கொண்டனர் என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு கர்நாடக மாநில முதல்வர் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்பி சுரேஷுக்கும் மாநில அமைச்சர் அஸ்வத் நாராயணனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது இந்த வாக்குவாதம் தள்ளுமுள்ளு அளவிற்கு போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநில முதல்வர் முன்னிலையில் எம்பியும் மாநில அமைச்சர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது