1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (16:02 IST)

நாலுமே பெண் குழந்தை; ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்ட விவசாயி தற்கொலை!

கர்நாடகாவில் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட விவசாயிக்கு 4 குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சீனிவாசப்பூரை சேர்ந்தவர் லோகேஷ். விவசாயியான இவருக்கு மஞ்சம்மா என்ற மனைவி உள்ளார். லோகேஷுக்கு தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் அவருடைய மனைவிக்கு ஒவ்வொரு முறையும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.

மூன்று முறை பெண் குழந்தைகளை பெற்ற மஞ்சம்மா நான்காவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த முறை பெண் குழந்தை பிறந்துவிடும் என நம்பிக்கையுடன் இருந்துள்ளார் லோகேஷ். ஆனால் நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறக்கவே மனமுடைந்துள்ளார் லோகேஷ்.


இதனால் வீட்டிற்கு சென்ற லோகேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் லோகேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதில் 3 பெண்களை வளர்ப்பதே கஷ்டமாக உள்ள நிலையில் 4வது குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என எதிர்பார்த்ததாகவும், அதுவும் பெண்ணாக போனதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K