வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2022 (10:51 IST)

11 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்; அரசாணை வெளியீடு

sanitary
கர்நாடக மாநிலத்தில் தூய்மை பணி யாளர்கள் 11 ஆயிரம் பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப் பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
 
 கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார ஊழியர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் 11 ஆயிரத்து 136 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் இனி நிரந்தர ஊழியர்களுக்கான சம்பளம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மற்ற சுகாதார ஊழியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட சுகாதார ஊழியர்கள் கர்நாடக மாநில அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva