ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!
தலைநகர் டெல்லியில் ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காததால் தான் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது என்றும், பாராளுமன்ற தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், இந்நேரம் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் என்றும் தேர்தல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகள் நிலவரத்தில், பாஜக 46.8% மற்றும் ஆம் ஆத்மி 43.2% பெற்றுள்ளது. வெறும் 3% வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில், தலைநகர் டெல்லியை ஆம் ஆத்மி இழந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால், காங்கிரஸ் கட்சி பெற்ற 6% வாக்குகளையும் சேர்த்து 49% வாக்குகளை பெற்று இருக்கும் என்றும், இதனால் ஆட்சியையும் தக்க வைத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பாஜகவிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களில் சிலர் வெறும் 1000 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றும், இந்த தோல்விக்கு ஒரே காரணம் கூட்டணி உடைந்தது தான் என்றும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களின் ஈகோவால் தான் இந்த கூட்டணி முறிந்தது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran