1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:19 IST)

வீடியோ காலில் தொல்லை செய்த பெண்: எம்.எல்.ஏ போலீசில் புகார்!

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பாளர் மீது பாஜக மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஜி எச் திப்பாரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.


ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஜி எச் திப்பாரெட்டி அக்டோபர் 31 மாலை தனக்கு வீடியோ அழைப்பு வந்ததாகவும், அதை எடுத்த போது ஒரு பெண் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கினார் என்றும் கூறினார். பின்னர் அழைப்பை உடனடியாக  துண்டித்துள்ளார். இதன் பிறகு ஒரு மோசமான வீடியோவைப் பகிர்ந்தார் என 75 வயதான சட்டமன்ற உறுப்பினர் தனது புகாரில் கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண் அழைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திப்பாரெட்டி கோரினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு முதல் அழைப்பு வந்தபோது, அழைப்பாளர் தனது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவருக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மீண்டும், அரை நிமிடம் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. எனது தொலைபேசியை எனது மனைவியிடம் கொடுத்தேன், அவர் அந்த எண்ணை பிளாக் செய்தார் என்று எம்எல்ஏ கூறினார்.

காவல்துறை ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்ததாக திரு திப்பாரெட்டி கூறினார்.

Edited By: Sugapriya Prakash