செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (08:11 IST)

தலைமுடி கொட்டியதால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

suicide
தலைமுடி கொட்டியதால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!
தலைமுடி கொட்டியதால் 29 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழிக்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் பிரசாந்த். மெக்கானிக் வேலை செய்து வரும் இவருக்கு தலைமுடி பிரச்சனை இருந்துள்ளதாக தெரிகிறது
 
கடந்த சில ஆண்டுகளாக தலைமுடி உதிராமல் இருக்க சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் தொடர்ந்து தலைமுடி உதிர்ந்து வந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் தலை முடி கொட்டியதால் அவரை நண்பர்கள் கேலி செய்ததாகவும் அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரசாந்த் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கோழிக்கோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva