வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (11:16 IST)

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே பத்தாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனை அடுத்து முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெளியானது என்பதும் அதில் 124 வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது இரண்டாம் வட்டமாக 42 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 58 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இந்த வார இறுதியில் வெளியாகும் என கர்நாடக மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
 
Edited by Siva