திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (12:11 IST)

வங்கி ஊழியரை நடுத்தெருவில் தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..! பொதுமக்கள் அதிர்ச்சி..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வங்கி ஊழியரை நடுத்தெருவில் நடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மட்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஹஸ்பத் சிங் என்பவர் வங்கி ஒன்றில் சென்று அங்கு உள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. விவசாயிகளின் பணத்தை வங்கி ஊழியர்கள் கையாடல் செய்துவிட்டதாகவும் இதை அடுத்து கணக்கு புத்தகத்தை மறைத்துக் கொண்டு தான் கணக்கு கேட்டால் தவறான அணுகுமுறையை கையாண்டதாகவும் அவர் வங்கி ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினார். 
 
இதனை அடுத்து வங்கி ஊழியர்களுக்கும் எம்எல்ஏக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் திடீரென வங்கி ஊழியரை வங்கியில் இருந்து வெளியே இழுத்து வந்து நடுரோட்டில் எம்எல்ஏ அடித்தார். 
 
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் எம்எல்ஏ மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் காணும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran