திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (19:04 IST)

''மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவேன் !''- பிரபல நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர்

Swastika Mukherjee
மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவேன் என்று தயரிப்பாளர் மிரட்டல் விடுத்ததாக நடிகை புகாரளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர், ஷிப்பூர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அவரது  உதவியாளர்கள் மீது நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி   போலீஸில் புகாரளித்துள்ளார்.

அதில், தங்கள் ஆசைக்கு இணங்கும்படி, ஷிப்பூர் படத் தயாரிப்பாளர் மற்றும் அவரது உதவியாளார்கள் மிரட்டியதாகவும், இதற்கு இணங்க மறுத்தால், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததா புகாரில் தெரிவித்துள்ளார்.

நடிகைக்கு மிரட்டல் விடுத்த புகாரில் சிக்கியுள்ள தயாரிப்பாளர் தற்போது, அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.