1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. karnataka cm siddharamaya says about modi

மோடியை போன்று பொய் பேசும் பிரதமரை நான் இதுவரை பார்த்ததில்லை: முதலமைச்சர் பேச்சு..!

PM Modi
மோடியை போன்று இந்த அளவுக்கு பொய் பேசும் பிரதமரை நான் இதுவரை பார்த்ததே இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசினார்.
 
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மேலும் பேசியபோது, ‘எனது நாற்பது ஆண்டு கால அரசியல் வாழ்வில் நரேந்திர மோடியை போன்று பொய் பேசும் பிரதமரை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். 
 
அனைவருக்கும் வங்கி கணக்கில் ரூ.1.5 லட்சம் செலுத்தப்படும் என்றார், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார், இதில் ஏதாவது ஒன்றாவது நடந்ததா என்று கேள்வி எழுப்பிய சித்தராமையா பாரதிய ஜனதா என்றால் ஊழல், ஊழல் என்றால் பாரதிய ஜனதா என்று தெரிவித்தார். 
 
மொழி, ஜாதி மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது என்றும் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் பேசினார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மும்பை- கோவா இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்