பிரதமர் மோடியை சந்தித்த சுந்தர் பிச்சை..! சிறிது நேரத்தில் வெளியான அறிவிப்பு!
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசிய சில மணி நேரங்களில் முக்கிய அறிவிப்பை வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியரான கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார். அப்போது கூகிள் இந்தியாவில் முதலீடு செய்வது மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து பின்னர் பேட்டியளித்த சுந்தர் பிச்சை, இந்தியாவில் கூகிளின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 28 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய உள்ளதாக பிரதமரிடம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கிஃப்ட் தொழில்நுட்ப நகரத்தில் கூகிள் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம் அமைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூகிள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்ப்புகளை முற்றிலும் இந்தியாவிலிருந்து செயல்படுத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K