புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (18:26 IST)

தமிழகம் போன்று அதிருப்தி எம். எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - சித்தராமையா

கர்நாடக  சட்டசபையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு  தீர்மானம் மீது இன்று நாலாவது நாளாக விவாதம் நடைபெற்றுக்கொண்டுவருகிறது.
இந்நிலையில் இந்த விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, தமிழகத்தின் அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டி பேசினார். அதில் தமிழகத்தில் 18 எம் எல் ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தந்த ஆதரவை விலக்கிக் கொண்ட போது, தமிழக ஆளுநரிடம் தமிழக முதல்வரூக்கு எதிராக கடிதம் அளித்த ந18 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். அவ்வாறு 18 பேரை தகுதி நீக்கம்செய்த போது கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. இந்த தகுதி நீக்க உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
 
இந்நிலையில் ஒருவர் ராஜினாமா செய்யும் போது முழுமனதுடன் திறந்த புத்தகமாகவே தரவேண்டும். ஒருவேளை ராஜினாமாவுக்கு முன்னர் குதிரை பேரம் நடந்தது எனில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு முழுஅதிகாரம் உண்டு. ஆதனால் பணம், ஆசை பதவி ஆசை காட்டி எம். எல்.ஏக்களை பாஜக கட்சியினர் வாங்குவதை சபாநாயகர் தடுக்க வேண்டும். ஜனநாயகத்தை சபாநாயகர் காப்பாற்ற வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்தார்.