திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (13:47 IST)

கர்நாடகா சட்டமன்ற் தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளரின் மனு நிராகரிப்பு..!

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்ப மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கர்நாடகா சட்டமன்றத்திற்கு மே பத்தாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகேசி நகர் என்ற தொகுதியில் தமிழகர்கள் அதிகம் இருப்பதால் அதிமுக போட்டியிட முடிவு செய்தது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியின் சார்பில் ஏற்கனவே வேட்பாளர் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார் 
 
ஆனால் அவருடைய வேட் மணி நிராகரிக்கப்பட்டது. கையெழுத்து தவறாக இருப்பதாகவும் அதை சரி செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல் கோலார் தங்க வயல் தொகுதியிலும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் ஆனந்தராஜன் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran