திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (11:47 IST)

கர்நாடக சட்டசபை தேர்தல்: ஒரே தொகுதியில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டி..!

கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகேசி நகர் என்ற சட்டசபை தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் கர்நாடக மாநில அதிமுகவை தலைவர் அன்பரசன் என்பவரை வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் பாஜக தனித்து போட்டியிடும் நிலையில் பாஜக வேட்பாளரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே தொகுதியில் ஓபிஎஸ் அணியும் தனது வேட்பாளரை அறிவிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.
 
இன்னும் ஓரிரு நாளில் ஓபிஎஸ் புலிகேசி தொகுதியின் வேட்பாளர் அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran