ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (11:41 IST)

மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு கராத்தே பயிற்சி.. கேரளாவில் புதிய திட்டம்..!

மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் உள்பட பெண் ஊழியர்களுக்கு கராத்தே உள்பட தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்படும் என்று கொச்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் உள்ள கொச்சி மருத்துவமனையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் டாக்டர்கள் உள்பட பெண் ஊழியர்கள் அனைவருக்கும் தற்காப்பு கலை பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்காக மாநில அரசு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பயிற்சி திட்டம் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும் என்றும் இதில் கராத்தே, குங்பூ,  களரி சண்டை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் இந்த பயிற்சிகள் அனைத்தும் அரசு ஆதரவு பெற்ற அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக 50000 பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த பயிற்சி மருத்துவமனை ஊழியர்கள் அல்லாத பெண்களுக்கும் அளிக்கப்படும் என்றும் சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி கலையை பயிற்றுவிக்கும் வகையில் அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

Edited by Mahendran