வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (07:11 IST)

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்: பத்ம விருது பெற்றவார்கள் பிரதமருக்கு கடிதம்..!

Modi
கொல்கத்தாவில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பத்ம விருது பெற்றவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம், பெண்கள்,  மருத்துவர்கள் எதிரான குற்றங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே இது காட்டுகிறது என பத்ம விருது பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து பிரதமர் மோடி மத்திய அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva