செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (10:54 IST)

குடியுரிமை சட்டம்: உண்மையை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்

சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றதை அடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் முறைப்படி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது 
 
இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் செய்தனர். இருப்பினும் இந்த போராட்டத்தினால் சட்டத்தை வாபஸ் பெற வைக்க முடியாது என்ற உண்மையை புரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் ஒரு சில மாநில அரசுகள் குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறி உள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் அவர்கள் ’குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநில அரசும் கூற முடியாது என தெரிவித்துள்ளார் 
 
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் அல்லது இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றலாம் என்றும் கூறியுள்ள அவர், சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறுவது சாத்தியமே இல்லை என்று கூறியுள்ளார் குடியுரிமை சட்டத்தின் உண்மை சூழலை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரே உண்மையை ஒப்புக்கொண்டது போல் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது