குள்ளநரிகளுக்கு குட்டு வைத்த ஸ்டாலின்!
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கையும், அதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் ஆற்றிய எதிர் வினையும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து திமுக – காங்கிரஸ் இடையே மோதல் உருவாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி கருத்தியல்ரீதியாக திமுக – காங்கிரஸ் பெரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும், தொடர்ந்து கூட்டணி அமைத்து செயல்படுவோம் எனவும் கூறியிருந்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக - காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும். திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என குள்ளநரி கூட்டங்கள் காத்துக்கிடக்கின்றன என எதிர்கட்சியை மறைமுகமாக சாடினார்.