1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Prakashraj question about hindi imposing

என்னை இந்தி பேச சொல்ல நீங்கள் யார்? – பிரகாஷ் ராஜ் கேள்வி!

prakashraj
சமீபத்தில் இந்தி பேசுவது குறித்த சர்ச்சைகள் பெரிதாக எழுந்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என பேசியதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இதனால் இந்தி பேசுவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விவாதங்களை எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் “ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? உங்கள் திட்டம் என்ன? எனக்கு தேவையென்றால் எந்த மொழியையும் நான் கற்றுக் கொள்வேன். நான் என்ன உண்ண வேண்டும், உடுத்த வேண்டும், என்ன மொழி பேச வேண்டுமென சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இலங்கை பொருளாதார நெருக்கடி: இரண்டு நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு