தொடர்புடைய செய்திகள்
- சட்டசபையில் வாஸ்து சரியில்லை – ஜெகன் மோகன் ரெட்டியை எச்சரிக்கும் வாஸ்து நிபுணர்
- யாருடைய நிலத்தையும் பிடுங்கி நாங்கள் சாலை அமைக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
- மோடிக்கு முன்னரே விசிட் அடித்த ராகுல்;கேரளா உற்சாகம்
- ”பிரச்சாரம் செய்ய அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்” –சரத் பவார் தொண்டர்களுக்கு அறிவுரை
- பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி: உடைந்த கூட்டணி - என்ன நடக்கிறது உத்தரபிரதேச அரசியலில்?
ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த ”அதிரடி” திட்டம்
ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை நியமனம் செய்யப்போவதாக செய்திகள் வந்துள்ளன.
இன்று காலை ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றதில் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் 25 அமைச்சர்களும் 5 துணை முதலமைச்சர்களும் செயல்படுவார்கள் என்றும், இவர்களின் பதவி பிரமாணம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதகாவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 5 துணை முதலமைச்சர்களில் ஒரு பட்டியல் இனத்தவரும், ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரும், ஒரு சிறுபான்மையினரும்,காபு இனத்தை சேர்ந்த ஒருவரும் பதவி ஏற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதற்கு முன்பு ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இரண்டு துணை முதல்வர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
