செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (11:07 IST)

”பிரச்சாரம் செய்ய அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்” –சரத் பவார் தொண்டர்களுக்கு அறிவுரை

மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது கட்சி தொண்டர்களிடம் ஆர்.எஸ்.எஸ்.ஸை சுட்டிக் காட்டி ”அவர்களை பார்த்து பிரச்சாரம் செய்ய கற்றுகொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறினார்.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களை மற்றுமே கைப்பற்றின.

இந்த நிலையில் தன்னுடைய கட்சி தொண்டர்களிடம் உரையாற்றிய சரத் பவார், நாடாளுமன்ற தேர்தலில் நமது கட்சி சொற்ப இடங்களையே கைப்பற்றினாலும் நமது கட்சியின் பெயருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று தொண்டர்களை தேற்றினார்.

மேலும் அவர் மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நெருங்கிகொண்டிருக்கும் நிலையில் ”நமது பிரச்சார முறையில் நாம் மிகவும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ்.ஸை பார்த்து நாம் பிரச்சார முறைகளை கற்றுகொள்ள வேண்டும்.

அவர்கள் ஒவ்வொரு வீட்டின் உறுப்பினர்களையும் தெரிந்து வைத்திருக்கின்றனர். பிராச்சாரத்திற்கு செல்லும்போது ஒரு வீடு பூட்டியிருந்தது என்றால் அவர்கள் மீண்டும் மீண்டும் செல்வார்கள்” என்று தனது தொண்டர்களிடம் அறிவுரை கூறியதாக தெரியவந்துள்ளது.