ஜேஇஇ மெயின் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு: மத்திய கல்வி அமைச்சர் டுவிட்டரில் தகவல்
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜேஇஇ மெயின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
2021 ஆம் ஆண்டு ஜெயில் மெயின் தேர்வு மே மாதம் 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வரும் சூழலில் இந்தத் தேர்வை நடத்த முடியாது என்று தெரியவந்து உள்ளது
இதனை அடுத்து ஜேஇஇ மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் ஜேஇஇ மெயின் தேர்வு குறித்த தேதி அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறப்படும் என்றும் ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் பிஜி நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜேஇஇ மெயின் தேர்வு மொத்த வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது