2022-23ஆம் ஆண்டுக்கான வருமான வரித்தாக்கல் படிவங்கள் வெளியீடு..!
வருமானவரி தாக்கல் படிவங்கள் பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் தான் வெளியிடப்படும். ஆனால் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில் தற்போதே படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டுக்கான ஐடிஆர் படிவங்கள் ஒன்று முதல் ஆறு வரை அனைத்து படிவங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் ஏப்ரல் 1 முதல் தான் வருமான வரியை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு வருமான வரி படிவங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran