80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது: அதிர்ச்சி தகவல்
80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது: அதிர்ச்சி தகவல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது என தெரிவித்துள்ளது வரி செலுத்துவோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை இருந்தால் வருமான வரி கட்ட தேவையில்லை என அறிவித்துள்ளார்.
இதனால் 5 லட்சம் முதல் 7.50 லட்சம் வரை 5 சதவிகிதம் வரியும், 7.50 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10 சதவிகிதம் வரியும், 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20 சதவிகிதம் வரியும், 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 25 சதவிகிதம் வரியும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வரி வரம்பு புதிய வருமான வரி முறையை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்றும், 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் இந்த வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8
Edited by Mahendran