1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (12:47 IST)

டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..!

bbc delhi
டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..!
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை செய்து வருவதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. 
 
சமீபத்தில் பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியாகி மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்தது என்பதும் இந்த ஆவண படத்தை எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒளிபரப்பு வருகின்றார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
குறிப்பாக கல்லூரிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஆவண படத்தை வெளியிட்டு வருவது மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை செய்து வருகின்றனர். பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva