மனித விண்வெளி பயணம்; எஞ்சின் சோதனை வெற்றி! – இஸ்ரோ அறிவிப்பு!
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவதன் முதல் கட்டமாக எஞ்சின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்த உள்ள என்ஜினை இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை செய்துள்ளனர். திருநெல்வேலியில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆய்வகத்தில் கிரையெஜனிக் எஞ்சினை சோதித்ததில், சோதனை வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.