பொங்கல் அன்று தீபாவளி – விஜய் ரசிகர்களுக்கு செல்லம் ஆகிய விக்னேஷ் சிவன்!
மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாவதை ஒட்டி விக்னேஷ் சிவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் 8 மாத தாமதத்துக்குப் பிறகு ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர். இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனரும் நடிகை நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் மோதிக்கொள்ளும் விதமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் அன்று தீபாவளி எனக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த ஸ்டேட்டஸை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.